அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் நிலமா?
அரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் நிலமா?

ஈப்போ ஏப்ரல் 13-

பேரா மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ பங்காற்றிய முன்னாள் பெராங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜமாலுடினுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் குறந்த விலையில் நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டை முன் வைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாள்கள் கூட்டத்தில் இந்த தகவலை உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரப்பாட் வெளியிட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்க்கட்சியிடம் தோல்விக் கண்டது.

அதன் பின்னர் ஆளும் கட்சியில் இருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்க உறுதுணையாக இருந்த டத்தோ ஜமாலுடின் மாநில நில மேம்பாட்டு கழகத்திடம் இருந்து 257.73 ஏக்கர் நிலத்தை கடந்த 2015 இல் வாங்கியுள்ளார். அது அதன் நடைமுறைக்கு விலைக்கு ஏற்ப வாங்கவில்லை ஏக்கர் ஒன்றுக்கு 6 ஆயிரம் வெள்ளிக்கு வாங்கியுள்ளார்.

பேராவில் உள்ள புரட்டோன் சிட்டியில் அந்த நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதீர் மற்றும் மாநில நில மேம்பாட்டு கழகம் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும் . இல்லையேல் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் புகார் செய்யப்படும் என்று இங்குள்ள மாநில டிஏபி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

இந்த செய்தியாளர் சந்திப்பில் நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன