அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இன்று ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

இன்று ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?

சிரம்பான், ஏப்ரல் 13-

இரண்டு வார கால தீவிர பிரச்சாரத்திற்கு பின்னர் ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது.

நம்பிக்கை கூட்டணி சேர்ந்த டாக்டர் எஸ்.ஸ்ரீராம், தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ முகமட் ஹசான், சுயேட்சை சுயேச்சை வேட்பாளர்களான ஆர். மலர்விழி, முன்னாள் விரிவுரையாளரான முகமட் நோர் யாசின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

14 வாக்களிப்பு மையங்களில் 53 இடங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 .30 மணிவரை வாக்களிப்பு நடைபெறும். ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 20, 926 பேர் பதிவு பெற்ற வாக்காளர்களாக உள்ளனர்.

முன்கூட்டியே 110 பேர் வாக்களித்துள்ளனர். இது தவிர 8 பேர் அஞ்சல் வாக்காளர்களாவர். நம்பிக்கை கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பி கே ஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம் ரந்தாவ் தமிழ்ப் பள்ளியில் வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தேர்தல் நடவடிக்கையில் 515 பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன