மலேசியாவிற்கு 4ஆவது தங்கம்!

கோலாலம்பூர், ஆக. 17-

இசையுடனான நீச்சல் போட்டியில் மலேசிய வீராங்கனை கன் ஹுவா வேய் தங்கப்பதக்கம் வென்றார். இதோடு சேர்த்து மலேசியா 4 தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
புக்கிட் ஜாலில் அகுவாதிக் நீச்சல் குளத்தில் நடந்த இப்போட்டியில், நீச்சலுக்கான முதல் தங்கப்பதக்கத்தை ஹுவா வேய் வென்றுள்ளார்.

73.8386 என்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அவர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தப் போட்டியில் சிங்கப்பூர் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றது.

இதுவரையில் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 4 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியா 2 தங்கம் 1 வெண்கலப்பதக்கத்துடன் 2ஆம் நிலையிலும் மியன்மார் 2 தங்கப்பதக்கத்தை வென்று 3ஆம் நிலையிலும் சிங்கப்பூர், தாய்லாந்து 4 மற்றும் 5ஆம் நிலைகளில் உள்ளன.