அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வளர்தமிழ் விழா: சிறந்தப் பள்ளிக்கான சுழற் கிண்ணத்தை ஹோர்லி இடைநிலைப் பள்ளி வென்றது!
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

வளர்தமிழ் விழா: சிறந்தப் பள்ளிக்கான சுழற் கிண்ணத்தை ஹோர்லி இடைநிலைப் பள்ளி வென்றது!

தெலுக் இந்தான், ஏப்ரல் 13 –

இடைநிலைப்பள்ளிகளுக்கான வளர்தமிழ் விழாவில் போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற சிறந்த ள்ளிக்கான சுழற் கிண்ணத்தைத் ஹோர்லி இடைநிலைப்பள்ளி தட்டிச் சென்றது.

இந்நிகழ்வு இஙகுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதன் இரண்டாவது பரிசை கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியும், மூன்றாவது பரிசை சுல்தான் அப்துல் இடைநிலைப்பள்ளியும் பெற்றன.

இந்நிகழ்வைத் திறந்துவைத்துப் பேசிய வழக்கறிஞர் வே.சந்திரன், இந்திய மாணவ மாணவியரின் மொழி மற்றும் இலக்கிய உணர்வின் வெளிப்பாடு வளர்தமிழ் விழா போன்றவற்றால் மேலும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.

தமிழ்மொழியின் அருமை பெருமைகளையும், தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உன்னத உணர்வுகளையும் அடுத்தத் தலைமுறை யினரான மாணவர் சமூகம் நன்கு அறிந்து கொள்ளும் இடமாக வளர்தமிழ் விழா அமைவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாணவ மாணவியர் எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன