அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மீண்டும் வருகின்றது மோஜோவின் ரெட்ரோ ரஹ்மான்! மகிழ்ச்சியில் வெள்ளத்தில் ரசிகர்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் வருகின்றது மோஜோவின் ரெட்ரோ ரஹ்மான்! மகிழ்ச்சியில் வெள்ளத்தில் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஏப்ரல், 13-

மோஜோ நிறுவனம் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு மலேசியாவில் தொடர்ந்து மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏஆர் ரஹ்மான் பாடல்களை இவர்கள் தொகுத்து வழங்கிய ரெட்ரோ ரஹ்மான் எனும் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய சாதனை படைத்தது.

அந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி ஹரிணி, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன் ஆகியோருடன் மலேசிய பாடகர்களும் கலந்து கொண்டு ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் ரெட்ரோ ரஹ்மான் 2.0 எனும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் முன் வைத்தார்கள். இந்நிலையில் கூடிய விரைவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என மோஜோ அறிவித்திருக்கின்றது. இவ்வாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஸ்டார் எக்போவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கின்றது. குறிப்பாக 60 வெள்ளியில் டிக்கெட் விற்கப்படவிருப்பதாக மோஜோ நிர்வாகி ரத்னகுமார் கூறியுள்ளார்.

6 முன்னணி பாடகர்களுடன் சிறந்த பின்னணி இசை குழுவும் மலேசியாவிற்கு வரவிருப்பதாக மோஜோ அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு மலேசிய இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

குறிப்பாக ரசிகர்கள் இவர்களை அழைத்து வரலாமே என்ற பரிந்துரையையும் முன்வைக்கின்றார்கள். Mojo இதற்கு முன் ஏற்பாடு செய்த அனைத்து இசை நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வேளையில் இவ்வாண்டு நடக்கவிருக்கும் முதல் நிகழ்ச்சி புதிய முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன