அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்

சென்னை, ஏப் 13-

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு  மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன