அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > லாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார்.
அரசியல்முதன்மைச் செய்திகள்

லாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார்.

தைப்பிங், ஏப் 14-

லாருட் தொகுதி மஇகா தலைவர் தே.கலைச்செல்வன் நேற்று காலமானார்.

லாருட் வட்டார நகராண்மை கழக உறுப்பினருமான இவர் கடந்த 20 ஆண்டுகளாக லாருட் மஇகா தொகுதி மூலமாக பல சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.

அதோடு, தைப்பிங் இந்து ஆலய சபா, மலேசிய இந்து சங்கம் தைப்பிங் வட்டார பேரவை, தைப்பிங் தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற இந்திய இயக்கங்களின் வழி தைப்பிங் வட்டார மக்களுக்கு இவர் பல உதவிகளை செய்துள்ளார்.

இவரது மறைவு மஇகா உறுப்பினர்களுக்கு தைப்பிங் வட்டார மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாருட் மஇகா தொகுதியின் முன்னாள் தலைவர் க.தேவராஜின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன