அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்

ஜோகூர்பாரு, ஏப்.14-

புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் ஜொகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலையில் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதற்கு முன் சுகாதார சுற்றுப்புற மற்றும் விவசாயத்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

இம்மாதம்  8ஆம்  தேதி  பதவி விலகிய  ஒஸ்மான் சபியானுக்கு பதில் டாக்டர் ஷாருடின் மந்திரிபுசாராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்று காலை  9.30  மணிக்கு இஸ்தானா புக்கிட் செரெனியில் ஷாருடினுக்கு சுல்தான் இப்ராஹிம்  நியமன கடிதத்தை வழங்கினார்.

நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து கட்சியின் உறுப்பினராக ஷாருடின் இருந்து வருகிறார்.

புதிய மந்திரி புசார் நேர்மையாகவும் நம்பிக்கையாகவும், பொறுப்பானவராகவும் பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என சுல்தான் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.

மேலும் குடிநீருக்கு முக்கிய வளமாக இருக்கும் ஆறுகளின் தூய்மையை பேணுவதற்கு மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன