அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செய்தியாளர்களின்  நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி கெராக்கான்! -டத்தோ டோமினிக் லாவ்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செய்தியாளர்களின்  நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி கெராக்கான்! -டத்தோ டோமினிக் லாவ்

கோலாலம்பூர், ஏப்.13-

செய்தியின் உண்மை நிலை மாறாது சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கருத்துகளை வெளியிடும் செய்தியாளர்களின் நலனை கெராக்கான் கட்சி பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பொருட்டு தங்களின் கடமையை உணர்ந்து செயலாற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலை நடத்தும் தனது உறுப்பினர்களுக்கு எதிராக கெராக்கான் நடவடிக்கை மேற்கொள்ளும்  என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.

பத்திரிகையாளர்களை மதிக்கும் ஒரு கட்சி கெராக்கான். ஆகையால், இவர்களுக்கு  எவ்வித இன்னல்கள் அல்லது நெருக்குதல்கள் வந்தாலும் இவர்களை கெராக்கான் தற்காக்கும். அதே வேளையில், நீதியை நிலை நாட்ட இவர்களுக்காக இலவசமாகவும் வாதாடும் என்று இங்கு இக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“பத்திரிகையாளர்கள் மீதோ அல்லது அவற்றின் உரிமையாளர்கள் மீதோ வழக்கு தொடுக்கும் உறுப்பினர்கள் கட்சியில்  இருந்து நீக்கப்படுவர்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே, கட்சித் தலைவராகத் தாம் பொறுப்பற்ற பின்னர் உதவி தலைவர் டத்தோ பரமேஸ்வரன் உட்பட எட்டு இந்தியர்கள்   உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக  டோமினிக் லாவ் சொன்னார்.

தமிழ், சீன மற்றும் மலாய் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட  இந்நிகழ்ச்சியில் டத்தோ பரமேஸ்வரன், கட்சியின் துணை சபாநாயகர் வி.பிரபாகரன், டாக்டர் எடி எட்வர்டு, கெடா மாநில தலைவர் எம். மாரிமுத்து , மத்திய செயலவை உறுப்பினர்கள், இளைஞர், மகளிர் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்ச்சிக்கு மேலும்  சிறப்பு சேர்த்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன