அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மெட்ரிகுலேஷன் விண்ணப்ப முடிவுகள் நாளை வெளியிடப்படும்
சமூகம்முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன் விண்ணப்ப முடிவுகள் நாளை வெளியிடப்படும்

புத்ராஜெயா, ஏப். 14-

கல்வி அமைச்சு 2019/2020ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்குத் தேர்வு பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை நாளை அறிவிக்கும்.

மாணவர்கள் www.moe.gov.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

தேர்வு பெறாத மாணவர்கள் நாளை தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை மேல் முறையீடு செய்யலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மெட்ரிகுலேஷன் முடிவுகள்  தாமதமாக அறிவிக்கப்படுவதில் ஏற்படும் சிரமங்களுக்காக கல்வி அமைச்சு வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன