செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > நாடு முழுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது
சமூகம்முதன்மைச் செய்திகள்

நாடு முழுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோலாலம்பூர், ஏப் 14—

நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று விகாரி சித்திரை புத்தாண்டை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள பல ஆலயங்களில் இன்று காலையிலும் மாலையிழும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மலேசிய இந்துக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்தனர். அதோடு  இல்லங்களில் சைவ உணவுகள் மற்றும் இனிப்பு பொருட்களையும் சமைத்து தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் வரவேற்று மகிழ்ந்தனர்.

நேரிலும் தொலைபேசியில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் இந்துக்கள் தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். வாட்ஸ் அப், முகநூல் போன்ற  சமூக வலைத்தளங்களிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிகமாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன