செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > போலீஸ் ரோந்து காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதா? இருவர் கைது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

போலீஸ் ரோந்து காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதா? இருவர் கைது

சிரம்பான், ஏப் 14-

போலீஸ் ரோந்து காரை நிறுத்தி சோதனை செய்ததாக கூறப்படும் நம்பிக்கை கூட்டணியின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஒரு கும்பலுக்கு எதிராக   நடவடிக்கை எடுப்பதை தாம் போலீசிடமே விட்டுவிடுவதாக உள்துறை அமைச்சர் அமைச்சர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கூறினார்.

நேற்று நடைபெற்ற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது போலீஸ் ரோந்து காரை நம்பிக்கை கூட்டணி அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் சிலர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த சோதனை செய்த காணொளி வெளியானதைத் தொடர்ந்து முஹைதீன் இதனைத் தெரிவித்தார்.

அரசு சேவை பணியாளர்கள்  தங்களது கடமையில் ஈடுபடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவது குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.  இச்சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பை போலீஸாரிடம் விட்டுவிடுவதாக முகைதீன் கூறினார்.

அரசியல் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் எப்போதும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் .சட்டத்திற்கு எதிரான  நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நேற்று இரவு ரந்தாவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை போலீசார் இருவரை கைது செய்தனர். சிரம்பானைச் சேர்ந்த பயன்படுத்திய கார் விற்பனையாளர் ஒருவரும் ரந்தாவைச் சேர்ந்த லோரி ஓட்டுனரும் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் இடைக்கால போலீஸ் தலைவர் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.

ரந்தாவில் சீனப் பள்ளிக்கு முன் இரண்டு போலீஸ்காரர்கள் பயணம் செய்த  போலீஸ் ரோந்து காரை  அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன