புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > லிவர்புலைப் பற்றி கவலையில்லை – பெப் குவார்டியோலா !
விளையாட்டு

லிவர்புலைப் பற்றி கவலையில்லை – பெப் குவார்டியோலா !

லண்டன், ஏப்.15-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தைத் தற்காக்க போராடி வரும் மென்செஸ்டர் சிட்டி, தன்னை தொடர்ந்து துரத்தி வரும் லிவர்புலைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என அதன் நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 – 1 என்ற கோல்களில் கிறிஸ்டல் பேலசை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் முன்னணி மத்திய திடல் ஆட்டக்காரர் ரஹீம் ஸ்டேர்லிங் இரண்டு கோல்களைப் போட்ட வேளையில், கப்ரியல் ஜீசஸ் மற்றொரு கோலைப் புகுத்தினார். லீக் பட்டியலில் லிவர்புலைக் காட்டிலும் மென்செஸ்டர் சிட்டி இரண்டு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. எனினும் லிவர்புலைக் காட்டிலும் ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ளது.

வரும் புதன்கிழமை சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை சந்திக்க விருக்கிறது. மூன்று நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இவ்விரண்டு அணிகளும் பிரீமியர் லீக் போட்டியிலும் மோதவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்து வாரம் நடைபெறவிருக்கும் மென்செஸ்டர் டார்பி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டை எதிர்கொள்ள விருக்கிறது.

இனி வரும் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு இலக்கு கொண்டிருப்பதாக பெப் குவார்டியோலா தெரிவித்தார் எஞ்சியுள்ள ஐந்து ஆட்டங்களில் தமது ஆட்டக்காரர்கள் முழு கவனத்துடன் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன