மஇகா மத்திய செயலவை முன்னாள் உறுப்பினர் கே.தங்கராஜ் காலமானார்!

ஈப்போ ஏப்ரல் 15-

மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) மத்திய செயலவை யின் முன்னாள் உறுப்பினர் கே தங்கராஜு காலமானார். வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த வேளையில் திடீரென மரணம் அடைந்து இருப்பது மலேசிய இந்திய காங்கிரஸ் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

குறிப்பாக மஇகா முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல் தலைமையில் மத்திய செயலவையில் இவர் வெற்றி பெற்றார். குறிப்பாக  14ஆவது தேசிய பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தில் உள்ள ஜெலப்பாங் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டார்.

மலேசிய இந்திய காங்கிரசின் பாசீர் சாலாக் தொகுதியின் முன்னாள் தலைவரான இவர், பல ஆண்டுகளாக இக்கட்சியின் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர். அண்மையில்தான் கட்சியைச் சார்ந்த ஒரு இளைஞர் அகால மரணமடைந்தார். நிலையில் கே தங்கராஜும் மரணம் அடைந்திருப்பது மஇகா உறுப்பினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.