அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சிலிம் ரீவரில் வெ. 20 லட்சம் செலவில் பல்நோக்கு மண்டபம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலிம் ரீவரில் வெ. 20 லட்சம் செலவில் பல்நோக்கு மண்டபம்!

சிலிம் ரீவர் ஏப்ரல் 15-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிர்மாணிக்கப்பட்டு வந்த பல்நோக்கு மண்டபத்தின் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது. இங்குள்ள அருள் மிகு மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் சுமார் வெ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வந்த்து.

அதனை நிர்மாணிக்க தஞ்சோங்மாலிம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் டத்தோ கே. ஆர் . நாயுடு பொறுப்பேற்றிருந்தார் என்று ஆலய அறங்காவலர் வி.சுகுமாறன் தெரிவித்தார்.

பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர் அனைவரின் ஒத்துழைப்பினால் உருவாக்கப்பமட இந்த மண்டபத்தை ஆலயத்திடம் ஒப்படைத்தார் என்றார். இவ்வேளையில் இங்கு இந்த மண்டபத்தை உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட டத்தோ கே.ஆர்.நாயுடுவுக்கும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் சுகுமாறன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன