முகப்பு > குற்றவியல் > நஜிப்பின் வங்கிக் கணக்கு ஆவணங்கள் கிடைத்தன!  – பேங்க் நெகாரா அதிகாரி சாட்சியம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜிப்பின் வங்கிக் கணக்கு ஆவணங்கள் கிடைத்தன!  – பேங்க் நெகாரா அதிகாரி சாட்சியம்

கோலாலம்பூர் ஏப். 15-

ஆம் பேங்க் கிளை ஒன்றில் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வங்கி கணக்கு ஆவணங்கள் மற்றும் எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டின்
ஆவணம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பேங்க் நெகாரா மலேசியாவின் நிர்வாகி அஸிசுல் அட்ஷானி அப்துல் கபார் தமது சாட்சியத்தில் இதனைத் தெரிவித்தார்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திலிருந்து டத்தோஸ்ரீ நஜிப் வெளியேறியபோது..

கள்ளப் பணம் பரிமாற்ற சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டம், 2001ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெறப்படும் (அம்லா) சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக தாமும் இதர 3 அதிகாரிகளும் அந்த வங்கியில் பரிசோதனை செய்ததாக 41 வயதான அஸிசுல் கூறினார்.

1எம்டிபி துணை நிறுவனமான எஸ் ஆர். சி. இன்டர்நேஷனலின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு சம்பந்தப்பட்ட நஜிப்பின் லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் இரண்டாவது சாட்சி அஸிசுல் ஆவார்.

விசாரணை அதிகாரி அகமட் பர்ஹான் ஷாரியுடின் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி தம்மை வங்கி கணக்கு ஆவண தேடும் அதிகாரியாக நியமித்ததாக அஸிசுல் கூறினார் . பேங்க் நெகாராவின் இதர மூன்று அதிகாரிகளுடன் ராஜா சூழனில் ஆம்பேங்க் கிளையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
விசாரணை செய்யப்படுவதற்கு தேவையான கணக்குகள் பட்டியலை அந்த வங்கியின் கிளை நிர்வாகி உமாதேவியிடம் தாம் வழங்கியதாக அஜிசுல் கூறினார்.

நஜீப் வங்கி கணக்கு தொடர்பான 4 ஃபோல்டர்களை (Folder) கொண்ட ஆவணங்கள், எஸ் .ஆர் .சி. இன்டர்நேஷனலின் கணக்குகள் திறக்கப்பட்ட மேலும் 3 ஃபோல்டர்கள் தொடர்பான ஆதாரங்கள் பெறப்பட்டன. எஸ். ஆர் .சி இன்டர்நேஷனல் பிரிவு (யூனிட்), கண்டிங்கான் மெந்தாரி (Gandingan Mentari) கணக்குத் தொடர்பான ஆவணங்களும் இதில் அடங்கும்.

கள்ளப் பணம் பரிமாற்ற விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் தேடும் பட்டியலின் கீழ் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன .அதோடு தாம் பறிமுதல் செய்த ஆவணங்களையும் அஸிசுல் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர்.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி நஜீப் சட்டவிரோதமாக 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட போது அவரது வங்கிக் கணக்கில் தெரிவிக்கப்பட்ட அதே தொகை தான் இதுவாகும். இந்த வழக்கு தொடர்பாக நஜீப் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

1எம்டிபி தொடர்பான மோசடியில் அதிகார வரம்பு மீறல் மற்றும் மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நஜீப் விசாரணை கோரினார். 4 கோடியே 20 லட்சம் வெள்ளி கள்ள பரிமாற்ற பணத்தை பெற்ற குற்றத்திற்காக இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 8ஆம் தேதி தேத நஜீப் மீண்டும் நீதிமன்றம் வந்தார் .

நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஷாலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன