அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வீடற்ற   70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு! -துணைப் பிரதமர் வான் அஜிசா
அரசியல்

வீடற்ற   70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு! -துணைப் பிரதமர் வான் அஜிசா

புத்ராஜெயா, ஏப்ரல். 16-

குடியிருக்க வீடுகள் இல்லாத காரணத்தினால் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த 7,047 பேரில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு வேலைகள் தேடித் தரப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

வீடில்லாதோரின் பிரச்னைகளைக் களைவதற்காக தேசிய சமூகநல அறவாரிய ம் (ஒய்கேஎன்) 5 சமூக சேவை மையங்களை அமைத்திருப்பதாக துணைப் பிரதமர் கூறினார். கடந்த 2016 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் வீடில்லாதோருக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மையங்களில் 2,315 பேர் பதிந்து கொண்டதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டு அமைச்சருமான வான் அஜிசா விவரித்தார்.

அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களோடு  தங்கியிருப்போருக்காக ஒய்கேஎன் 10 தற்காலிக முகாம்களை அமைத்திருப்பதாகவும் அவர்  கூறினார்.

“நாடு முழுமையும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்கள் வழி இவ்வாண்டு ஜனவரியில் நாடு முழுமையும் 62,551பேர் பயனடைந்தனர்” என்று இங்கு ஒய்கேஎன் வியூக பங்காளித்துவ மகஜர் ஒப்பந்த கையெழுத்திடல் மற்றும் ஏற்பாட்டு  நிறுவனங்கள் அறிமுக நிகழ்ச்சியில்  உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் முன்னிலையில் 12 வியூக பங்காளித்துவ நிறுவனங்கள் கையெழுத்திட்ட  இந்த உடன்படிக்கையில்  ஒய்கேஎன் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா சே அஸ்மா இப்ராகிம் கையெழுத்திட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன