புத்ராஜெயா ஏப்ரல் 16-

சாலைகளிலிருந்து பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கையை அறிமுகப்படுத்தும் திட்டம் எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனைத் தெரிவித்தார்.

ELO எனப்படும் பழைய வாகனங்களை முடிவுக்குக் கொண்டுவரும் கொள்கையை இவ்வாண்டு இரண்டாவது காலாண்டில் அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக சீனா பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தியை அந்தோணி லோக் மறுத்தார்.

இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும் . இதற்கு முன் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன . ஆனால் பழைய வாகனங்கள் சாலையை பயன்படுத்துவதை தடை செய்யும் அல்லது தடுக்கும் கொள்கையை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என அந்தோணி லோக் கூறினார்.

வரி மற்றும் கார்களுக்கு காப்புறுதி எடுப்பதற்கு முன் பழைய வாகனங்களை பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என மலேசிய வாகன ரோபோட்டிக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி மடானி ஷஹாரி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

பழைய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானதாகும். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பொய்யான செய்தி வெளியாகி இருப்பதாக அந்தோணி லோக் கூறினார்.

12 மாதங்களுக்கு மேல் சாலை வரியை புதுப்பிக்காமல் இருந்தால்தான் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை புஸ்பாகோம் பரிசோதனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஃ வாகனங்கள் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றன என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது. . எனவே இந்த விவகாரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.