அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சூப்பர் லீக்: பிகேஎன்எஸ் குழுவை பகாங் வீழ்த்தியது!
விளையாட்டு

சூப்பர் லீக்: பிகேஎன்எஸ் குழுவை பகாங் வீழ்த்தியது!

ஷா ஆலம். ஏப்.16-

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு ஷா ஆலம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பகாங் அணி   2 – 1 என்ற கோல் கணக்கில் பி கே .என்.எஸ் குழுவை வீழ்த்தியது.

எனினும் தொடர்ந்து சளைக்காமல் தாக்குதல் நடத்திய பகாங் குழுவினர் ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது இரண்டாவது கோலை அடித்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். 75ஆவது நிமிடத்தில் பகாங் குழுவுக்கான இந்த கொலை ஜோஸ் எடுவாடோ அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் பகாங் அணி 21 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. ஜோகூரின் J.D.T குழு 23 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன