அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > காணாமல் போன இரு இளம் பெண்கள் பாதுகாப்புடன் கண்டுபிடிப்பு!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காணாமல் போன இரு இளம் பெண்கள் பாதுகாப்புடன் கண்டுபிடிப்பு!

பெட்டாலிங் ஜெயா ஏப் 16-

பெட்டாலிங் ஜெயாவில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடிய பின் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன இரண்டு இளம்பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். எம் திவ்யா (வயது 16) மற்றும்.என் நட்ஸ்ஹட்ரா (வயது 15) ஆகிய இருவரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு முன் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என பெட்டாலிங் ஜெயா ஓ .சி பி. டி துணை கமிஷன ஷானி செ டின் தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக பெட்டாலிங் ஜெயா மெக்ஸ்வல் டவர் கொண்டோ காசிங்கில் அந்த இரு பெண்களும் காணப்பட்டதாக கூறப்பட்டது. நட்ஸ்ஹட்ரா நவநீதாவும், திவ்யா முனியனும் பெட்டாலிங் அசுந்தா இடைநிலைப் பள்ளியின் மாணவிகளாவர்.

திங்கட்கிழமை விடியற்காலை மணி 2.30 அளவில் கேடிஎம் பத்து தீகாவில் இந்த இரு பெண்களும் இருந்ததை அப்பெண்களின் ஒருவரது அத்தை கண்டுபிடித்ததாக முகமட் ஜைனி செ டின் கூறினார். அதன்பின் அவர் அவ்விரு பெண்களையும் சுங்கை பூலோவிலுள்ள தமது வீட்டிற்கு அவர் கொண்டு சென்றுள்ளார்.

திங்கட்கிழமை அதாவது நேற்று காலை மணி 7.30 அளவில் அவர் அந்த இரு பெண்களையும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக முகமட் ஜைனி தெரிவித்தார்.

இந்த இரு பெண்களில் ஒருவர் தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முயன்றனர் என விசாரணையின் மூலம் தெரியவந்ததாக முகமட் ஜைனி கூறினார்.

அந்த இரண்டு பெண்களும் அருகேயுள்ள ஆலயத்திற்கு சித்திரைப் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்க சென்றதாக திவ்யாவின் தாயார் சாந்தி ஏற்கனவே கூறியிருந்தார். கிரேப் கார் மூலம் வீட்டுக்கு வந்து விடுவதாக இரவு 11 மணியளவில் திவ்யா குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன