ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர்! – சிவக்குமார் கோரிக்கை
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர்! – சிவக்குமார் கோரிக்கை

ஈப்போ ஏப்ரல் 16-

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் கோரிக்கை விடுத்தார். சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களில் பலர் தங்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு மறுக்கப்பட்டது

அல்லது கிடைக்காமல் போனதற்காக பெரும் வேதனையிலும் ஏமாற்றத்திலும் இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்களும் பெரும் வேதனையில் உள்ளனர் .எனவே இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சர் டாக்டர்மஸ்லி மாலேக் உடனடியாக தலையிட்டு கவனிக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனை நீடிக்கிறது .எஸ் பி எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்தும் வேதனை குறித்தும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

10A பெற்ற மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோன்று அதிகமான சிறந்த மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் ஏமாற்றத்தையும் கவலையையும் அடைந்திருக்கிறேன்.

நமது மாணவர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடையும் அளவுக்கு நமது கல்விமுறை ஏமாற்றத்தை ஏற்படுத்துவது எனக்கு புரியவில்லை. கடந்த அரசாங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிலைமை இருந்தது .ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பலமுறை நான் விவாதித்துள்ளேன். ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

இன்று அரசாங்கம் மாறிவிட்டாலும் இதே நிலை தொடர்ந்து நீடிக்கிறது .எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பலர் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறித்து நான் மட்டுமின்றி எனது அரசியல் தோழர்களும் கவலை அடைந்துள்ளனர்.

கடுமையாக சிரமப்பட்டு இரவு பகலாக படித்து எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காமல் வேதனையில் இருக்கின்றனர். தங்களது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய பிள்ளைகளின் சிறந்த தேர்ச்சி முடிவிற்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பெற்றோர்களும் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தங்களது ஏமாற்றம் குறித்து பெற்றோர்களும் இன்று காலையில் இருந்து என்னிடம் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டும் குறுஞ்செய்தி வாயிலாகவும் முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயருக்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய மலேசியாவில் இதுபோன்ற நியாயமற்ற தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையை அரசாங்கம் அமல்படுத்தக் கூடாது. எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இயல்பாகவே மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்க வேண்டும் .அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். திறமையான மாணவர்களை அரசாங்கம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது. அவர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் . பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்
என சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

One thought on “சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர்! – சிவக்குமார் கோரிக்கை

  1. Mathivanan

    Innum naam avananggal kitta piccai edukunuma sir… Micyai kurai kurininnga.. Ippa en piccai kekkiringga.. Teyimah kelungga

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன