கோலாலம்பூர் ஏப்ரல் 16-

மலேசிய தீயணைப்பு மீட்பு படை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் சிறந்த சேவையை முன்னிறுத்தும் வீரர்களுக்கு விருது வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றது.

இவ்விருதை முதல் முறையாக சரவணன் இளகமுரம் வென்று மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார். இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை இந்த விருதை வென்ற முதல் இளைஞர் என்ற பெருமையை இவர் கொண்டிருக்கின்றார்.

புத்ராஜெயாவில் உள்ள தீயணைப்பு மீட்புப் படையின் தலைமையகத்தில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் சரவணன் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

தீயணைப்பு மீட்பு படையில் தன்னலம் கருதாது உடனுக்குடன் அதிவேக சிந்தனையுடன் சிறப்பாக செயல்படும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டை பொருத்தவரை சரவணனின் அடைவுநிலை இத்துறையில் மிகப்பெரிய மனநிறைவைத் தந்ததால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரா பாரிட் புந்தாரை சேர்ந்த சரவணன் தீயணைப்பு மீட்பு படையில் இணைந்து தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கி வருகின்றார். சரவணன் அதை பொருத்தவரை இத்துறையில் முழு மனதுடன் ஈடுபட்டு தம்மால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.

இதுவரையில் நாட்டின் நடக்கவிருந்த பல அசம்பாவிதங்களை உடனுக்குடன் தடுத்து நிறுத்திய தீயணைப்பு மீட்பு படை வீரர்களின் பட்டியலில் சரவணன் தமது பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். அவரின் இந்த நடவடிக்கையானது மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவரின் இந்த நடவடிக்கையானது அனேகன் இணையதள பதிவிடும் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது