அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆர்டிஎம் – பெர்னாமா இந்திய பணியாளர்களுக்கு தகவல் பல்லூடக அமைச்சின் சிறந்த சேவை விருது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆர்டிஎம் – பெர்னாமா இந்திய பணியாளர்களுக்கு தகவல் பல்லூடக அமைச்சின் சிறந்த சேவை விருது!

புத்ராஜெயா, ஏப்ரல் 16-

மலேசிய தொடர்பு, பல்லூடக அமைச்சின் 2018 சிறந்த சேவை விருதளிப்பு நிகழ்ச்சியில் ஆர்.டி.எம் மற்றும் பெர்னாமாவைச் சேர்ந்த இந்திய பணியாளர்களுக்கு சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதுகளை வழங்கிய தொடர்பு பல்லூட அமைச்சர் கோபிந்த் சிங்குடன் விருது பெற்றவர்கள்

புத்ராஜெயாவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விருது விழாவில் பல்லூடக தொடர்பு அமைச்சின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் இந்திய பணியாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

சிறந்த சேவைக்கான விருது பெற்ற மணியரசன் ஹரிகிருஷ்ணன், மின்னல் பண்பலை ரவின்

தொடர்பு , பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ விருதுகளை எடுத்து வழங்கினார். பெர்னாமா செய்தி அலைவரிசையின் தலைமை ஆசிரியர் அருள்ராஜு துரைராஜ், பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவு ஆசிரியர் வனிதா கோவிந்தன், பல்லூடக பிரிவின் நிருபர்கள் எஸ். கிஷோகுமாரி, ரட்சாரதன் , விளையாட்டு செய்திப் பிரிவு நிருபர் விக்னேஸ்வரன் ஆகியோருடன் 35 பெர்னாமா ஊழியர்களுக்கும் சிறந்த ஊழியர் விருது வழங்கப்பட்டது.

அதேவேளையில் ஆர்.டி.எம் வானொலி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் இந்திய ஊழியர்களும் இம்முறை சிறந்த சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக மின்னல் எப்.எம்-ம்மின் முன்னாள் அறிவிப்பாளர்களான புனிதா சுப்ரமணியம் மற்றும் ரவீன், வானொலி செய்தி வாசிப்பாளர் மணியரசன் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட புனிதா சுப்ரமணியம்

 

இவர்களுடன் மலாக்கா எப்.எம் வானொலியில் பணிபுரியும் அறிவிப்பாளர் ரேவதி துரைராஜூவுக்கும் விருது வழங்கப்பட்டது. ஓராண்டில் சிறந்த சேவையை வழங்கிய அவர்களும் சான்றிதழ்களும் ஆயிரம் ரிங்கிட் வெகுமதியும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற அனைத்து இந்திய பணியாளர்களுக்கும் அநேகன் இணையச் செய்தித் தளதின் அன்பு வாழ்த்து! வளர்க பெருமையுடன்!

மலாக்கா எப்.எம், வானொலியில் பணிபுரியும் அறிவிப்பாளர் ரேவதி துரைராஜூ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன