அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சுஹாகாம் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ  ரசாலி இஸ்மாயில் விலகல்!
அரசியல்

சுஹாகாம் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ  ரசாலி இஸ்மாயில் விலகல்!

பெட்டாலிங் ஜெயா, ஏப். 16-

     தமது மூன்று ஆண்டு  பதவி காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே மனித உரிமை ஆணையத்தின்  (சுஹாகாம்) தலைவர்  டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் அப்பதவியினின்று விலகினார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு சுஹாகாம் தலைவராக நியமிக்கப்பட்ட ரசாலியின் பதவி காலம் இம்மாதம் 27ஆம் தேதியோடு பூர்த்தியாகவிருந்ததாகக் கூறப்பட்டது.

    தமது பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் மற்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோரிடம் தாம் வழங்கியதை ரசாலி உறுதிப்படுத்தினார்.

  “மூன்று ஆண்டுகள் சுஹாகாமில் பணியாற்றியுள்ளேன். சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன் என்றே நம்புகிறேன். இப்போது ஆலோசனை வழங்குவதைக் காட்டிலும் மேலும் அதிகமான சேவைகளில் ஈடுபட விரும்புகிறேன்” என்றார் அவர்.

   “அது ஆலோசனை ரீதியிலேயே அமைந்திருக்கும். அவ்வளவு வித்தியாசம் இருக்காது” என்றார் ரசாலி.   தமது முடிவு குறித்து ஆணையத்திடம் தாம் அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்ட ரசாலி முன்கூட்டியே தாம் பதவி விலகுவது புதிய தலைவரைத் தயார்படுத்துவதற்குப் போதிய கால அவகாசத்தை வழங்கும் என்றார்.

   மக்களின் மேம்பாட்டிற்கு உதவும் பணிகளில் தாம் கவனம் செலுத்தப்  போவதாக அவர் மேலும் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன