ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > நஜிப்புக்கு எதிரான வழக்கு: 4ஆவது நாளாக தொடர்கிறது!பேங் க் நெகாரா அதிகாரி சாட்சியம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜிப்புக்கு எதிரான வழக்கு: 4ஆவது நாளாக தொடர்கிறது!பேங் க் நெகாரா அதிகாரி சாட்சியம்

கோலாலம்பூர் ஏப் 17-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் எதிர்நோக்கியுள்ள எஸ். ஆர் .சி. இன்டர்நேஷனல் சென். பெராஹாட் லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் உண்மைக்குப் புறம்பான சாட்சியம் வழங்கும்படி குறிப்பிட்ட சில தரப்பினர் தமக்கு விளக்கம் அளித்ததாக கூறப்படுவதைபேங்க் நெகாரா மலேசியாவின் துறையின் நிர்வாகி ஒருவர் மறுத்தார்.

இந்த வழக்கு தொடர்பான ஏதோ ஒன்றை மறைப்பதாக நஜிப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜிட் சிங் தெரிவித்த கருத்தையும் பேங்க் நெகாரா மலேசியாவின் நிதி உளவு மற்றும் அமலாக்கத்துறையின் நிர்வாகியான அஸிசுல் அட்ஷானி நிராகரித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி ஜாலான் ராஜா சூழனில் உள்ள ஆம் பேங்க்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பில் போலீஸ் புகார் செய்வது குறித்து நஜிப்பின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது சரியான போலீஸ் புகார் செய்ய வேண்டும் என்பதை தாம் அறிந்திருப்பதாக அஸிசுல் அட்ஷானி தெரிவித்தார்.

சோதனை நடத்திய பிறகு அந்த பொருளகத்தின் நிர்வாகி ஆர். உமாதேவியிடமிருந்து கடைசி ஆவணங்களை பெற்றுக் கொண்டபின் துன் எச் .எஸ் .லீ போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.

அரசுத் தரப்பின் இரண்டாவது சாட்சியான அஸிசுல் அட்ஷானி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை காலையில் சாட்சியமளித்த போது இதனைத் தெரிவித்தார். எஸ் .ஆர் .சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி சம்பந்தப்பட்ட 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டையும் நஜீப் எதிர்நோக்கியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன