ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஆட்சிக் குழுவில் இருந்து நீக்கப்படுவேன்! ஜோகூர் ஜ.செ.க. செயலாளர் டான் தகவல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஆட்சிக் குழுவில் இருந்து நீக்கப்படுவேன்! ஜோகூர் ஜ.செ.க. செயலாளர் டான் தகவல்

ஜொகூர்பாரு ஏப்ரல் 18-

ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தம் நீக்கப்படலாம் என ஊராட்சி மன்றம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டான் ஹோங் பின் கூறினார்.’

அண்மையில் ஜொகூர் மந்திரி புசார் மாற்றப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு புதிய மந்திரி புசார் நியமிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து விரைவில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக் குழுவில் தாம் இடம்பெறும் சாத்தியமில்லை என ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினருமான டான் தெரிவித்தார்.

இந்த முடிவை ஜ.செ.க தலைமைத்துவம் தம்மிடம் தெரிவித்து விட்டதாக அவர் சொன்னார் . என்ன காரணத்திற்காக தாம் ஆட்சிக் குழுவில் இருந்து நீக்கப்படுவது குறித்து எனக்கு தெரியவில்லை என ஜோகூர் மாநில ஜ.செ.க செயலாளருமான 38 வயதுடைய டான் தெரிவித்தார் .

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு கட்சிதான் என்னை பரிந்துரை செய்தது .தற்போது மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு மற்றொருவரின் பெயர் முன்மொழியப்பட்டதால் கட்சியின் முடிவை தாம் மதிப்பதாக அவர் கூறினார் .அதே வேளையில் மக்கள் தம்மை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்திருப்பதால் தாம் தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்து கொண்டு மக்களுக்கான தனது சேவையை தொடரப்போவதாகவும் டான் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன