அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் வங்கிக் கணக்கு விவரங்களை எம் ஏ.சி.சி பெற்றது!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் வங்கிக் கணக்கு விவரங்களை எம் ஏ.சி.சி பெற்றது!

கோலாலம்பூர் ஏப்ரல், 18-

14வது பொதுத் தேர்தல் முடிவுற்ற ஒரு வாரத்திற்கு பின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் ஆம் பேங்க் வங்கி கணக்கு விவரங்களை எம.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களையும் பெற்றுக்கொண்டதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பேங்க் நெகாரா மலேசியாவின் நிர்வாகி ஒருவர் சாட்சியமளித்த போது தெரிவித்தார்.

1எம்டிபி க்கு சொந்தமான எஸ். ஆர். சி . இன்டர்நேஷனல் தொடர்புள்ள 4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் பேங்க் நெகாரா மலேசியாவின் நிர்வாகி அகமட் பர்ஹான் ஷாரிப்புடின் இதனைத் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி எம் .ஏ சி சியிடமிருந்து எனக்கு வந்த கோரிக்கையில் எங்களிடம் உள்ள சில ஆவணங்களை எம் .ஏ. சி. சி .யிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி ஆம்பேங்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை எம் ஏ சி சி அதிகாரி வோங் சியன் ஹோங்கிடம் ஒப்படைத்தேன் என்றும் அகமட் பர்ஹான் கூறினார்.

1எம்டிபி தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பணி குழுவுக்கு மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள் உதவியதாகவும் அரசு தரப்பின் நான்காவது சாட்சியான அகமட் பர்ஹான் தெரிவித்தார்.

சிறப்பு பணி குழுவுக்கு உதவிய இரண்டு குழுக்களுக்கு பட்ருல் ஹாசிம் மற்றும் நுருல் அய்ன் தலைமை ஏற்றிருந்தனர். மற்றொரு குழுவுக்கு பேங்க் நெகாரா மலேசியாவின் விசாரணை அதிகாரி அஸிசுல் ஹட்ஷானி தலைமையேற்று இருந்ததாக நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜிட் சிங் குறுக்கு விசாரணையின்போது அகமட் பர்ஹான் கூறினார்.

சிறப்பு பணி குழுவுக்கு உதவிய இரண்டு குழுக்களுக்கு பட்ருல் ஹாசிம் மற்றும் நுருல் அய்ன் தலைமை ஏற்றிருந்தனர். மற்றொரு குழுவுக்கு பேங்க் நெகாரா மலேசியாவின் விசாரணை அதிகாரி அஸிசுல் ஹட்ஷானி தலைமையேற்று இருந்ததாக நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜிட் சிங் குறுக்கு விசாரணையின்போது அகமட் பர்ஹான் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன