திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > உலகில் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் டாக்டர் மகாதீர்!
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

உலகில் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் டாக்டர் மகாதீர்!

கோலாலம்பூர் ஏப்ரல் 18-

உலகில் செல்வாக்கு மிக்க 100 தனிப்பட்ட முக்கியமான நபர்களில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களையும் அனைத்துலக செய்தி சஞ்சிகையான டைம் தேர்வு செய்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலில் டாக்டர் மகாதீரின் பெயரையும் டைம் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங், நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா , அமெரிக்காவின் முன்னால் அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியார் மிச்செல் ஒபாமா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

டைம் சஞ்சிகையின் வாசகர்கள் உலகில் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்களின் பெயர்களை தேர்வு செய்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன