புத்ராஜெயா ஏப்ரல் 20-

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன்  விவாகரம் குறித்து கல்வி அமைச்சுவிடம் ஐபிஎப் கட்சி அப்பிரச்சனை கண்டறிய நேற்று தனது மகஜரை வழங்கியது. இட ஒதுக்கீடு முறையில் பிரச்னை நிலவிய வண்ணமாக தொடரும் இப்பிரசேனைக்கு தீர்வு காண அதன் விவரங்களை கண்டறிய மகஜரை மெட்ரிகுலேஷன் தொடர்பு பிரிவின் அதிகாரி திரு. ஹாஷிடன் பின் முகமது ஹுசைன் அவர்களிடம் வழங்கியதாக கட்சியின் தேசிய துணை செயலாளர் திரு.சங்கர் நாகப்பன் தெரிவித்தார்.

நமது இந்திய மாணவர்கள் நிறைய மாணவர்கள் எஸ்பிஎம்  தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்திருந்தாலும் அவர்களுக்கு மெட்ரிக்குலேசினில் இடம் கிடைக்காதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.கடந்த காலங்களில் தேசிய முன்னணி அரசாங்கம் வருடம் தோறும் 1500  மாணவர்களுக்கு இடம் அளித்தது மாணவர்களிடையே மிகுந்த வளர்ச்சியை குறித்தது மட்டுமல்லாமல் அவை மேலும் 700  ஏற்றம் அடைந்து  இருந்தது. இது அனைத்தும் வெளிப்படையான நிலையில் இருந்த போதிலும் தற்போது இருக்கின்ற பக்கத்தான் அரசாங்கத்து இது குறித்து மௌனம் சாதிப்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது.இது குறித்து விளக்கம் பெற சென்ற ஐபிஎப் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றும் இது குறித்து எந்த விளக்கமானாலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு மஸ்லி அவர்கள் மட்டுமே விளக்கம் அளிக்க கூடும் என அந்த அதிகாரி கூறியதாக திரு.சங்கர் தெரிவித்தார்.

நாடு தலைவியை அளவில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளோடு கல்வி அமைச்சுக்கு வந்து வெறும்  கையேடு செல்வது மனதுக்கு வருத்தத்தை அளிப்பதுடன் இந்த அரசாங்கத்தின் ஆட்சி குறிப்பாக இந்திய சமுதாயத்துக்கு நல்லதை கொடுக்கும் என நம்பிக்கையை இழந்ததாக அவர் தெரிவித்தார்.இந்த பிரச்சனைக்கு விளக்கம் கோரி மகஜரை வழங்கியுள்ளோம் இன்னும்  1 வாரத்தில் சம்பந்த பட்ட அதிகாரி அளித்தது அமைச்சர் பதிலளிக்க இல்லை என்றால் கட்சியின் உறுப்பினர்களை திரட்டி கல்வி அமைச்சின் முன் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயங்க மாட்டொம் என வர தெரிவித்தார்.

அந்த மகஜரில் உண்மையாக இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அப்படி கூடுதல் செய்தால் எத்தனை மாணவர்கள் அடங்குவர் என்றும் கேள்வி கேட்டு அவர்கள் கல்வி அமைச்சருக்கு மகஜரை வழங்கியதாக சங்கர் தெரிவித்தார்.சீனா சமூக மாணவர்களுக்கு 1000  இடம் ஒதுக்கீடு செய்த வேலையில் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கிய எண்ணிக்கை இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது. இதற்கு இந்திய அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது இன்னும் வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.