கோலாலம்பூர், ஏப்ரல். 20-

இந்திய மாணவர்களுக்கான 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் தொடந்து நிலைநாட்டப்பட் வேண்டும் என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தினர் நேற்று வலியுறுத்தினர்.

200க்கும் குறைவாக இருந்த மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 1,500 ஆக உயர்த்தினார். அதன் பின் மேலும் 700 இடங்களை நஜிப் ஒதுக்கினார். ஆக மொத்தத்தில் 2,200 இடங்கள் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் 700 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

இதன் வழி நம்பிக்கை கூட்டணி அரசை நம்பிய இத்திய சமுதாயத்தை ஏமாற்றிமே கிகிடைத்துள்ளது என்று பேரின்பம் மலேசிய இயக்கத்தின் தோற்றுநர் யு. தாமோதரன் கூறினார். நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் கூடுதலான இடம் வேண்டும் என இந்திய சமுதாயம் கேட்கவில்லை.

மாறாக நடைமுறையில் இருக்கும் வாய்ப்புகளை தற்காக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய சமுதாயம் போராடுகிறது. இதை நம்பிக்கை கூட்டணி அரசு நினைவில் வைத்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கல்வி மட்டுமே உறுதுணையாக உள்ளது. அதே வேளையில் மெட்ரிகுலேஷன் வாயிலாக உயர் கல்வி பயில வேண்டும் என பல இந்திய மாணவர்கள் கனவுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அக்கனவில் நம்பிக்கை கூட்டணி அரசு மண்ணை போடக்கூடாது.

ஆகவே இத்திய மாணவர்களுக்கான் 2,200 மெட்ரிகுலேஷன் இடங்களை நம்பிக்கை கூட்டணி அரசு நிலை நாட்ட வேண்டும் என்று தாமோதரன் கூறினார்.