செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மீண்டும் தங்க மகளாய் ஸ்ரீ அபிராமி..!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மீண்டும் தங்க மகளாய் ஸ்ரீ அபிராமி..!

தங்க மகளாக மீண்டும் சீனாவில் தடம் பதித்திருக்கின்றாள் குட்டித்தாரகை ஸ்ரீ அபிராமி.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் 14-வது ”ஸ்கெட் பெய்ஜிங் 2019” போட்டியில் பனித் தரையில் நடனமாடி சாகசங்களைப் படைத்து 2 தங்க பதக்கங்களை ஸ்ரீ அபிராமி வென்றிருக்கின்றார்.

தங்கங்களை குவித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஸ்ரீ அபிராமி புருவம் உயர்த்தும் வஐயில் தொடர்ந்து சாதனைகளைச் செய்து அதிரடி படைத்து வருகின்றார்.

மொத்தம் எட்டு நாடுகள் கலந்து கொண்டிருக்கும் இந்த போட்டியில் 400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்

அதில் மலேசியாவை பிரதிநிதித்து போட்டியிட்ட ஶ்ரீ அபிராமி நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிரிவில் தங்கத்தைப் பெற்று, இரண்டாம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

இரண்டாவது நாளான இன்று மீண்டும் இரண்டாவது தங்கத்தை வென்று பெருமையைத் தேடி தந்து வருகின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன