மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்!

0
1

முழுக்கட்டுரை அனுப்பும் இறுதி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தின் (புத்தகம்) ஏற்பாட்டில், எதிர்வரும் 18 & 19 ஆம் தேதி மே மாதத்தில் ஐபிஸ் ஸ்டைல் ஹோட்டல் (Ibis Style Hotel) செராஸ் கோலாலம்பூரில் மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ் மொழியியல் கழகம், இணை ஆதரவாளராக இதில் கைக்கோர்த்துள்ளனர். இது ஏற்பாட்டுக்குழுவினருக்கு கூடுதல் வலு சேர்ப்பதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் ஏற்படுத்து உள்ளது.

தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் என்று அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டுக்கு இதுவரை இந்தியா, அரேபியா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா முதலான நாடுகளுடன் மலேசியாவிலிருந்து பெருமளவில் ஆய்வுக் கட்டுரைகள் கிடைத்துள்ளன.

மேலும் பலர் தங்களுக்குத் மாநாட்டுத் தகவல் சற்றுத் தாமதமாகக் கிடைத்த காரணத்தால் உரிய நேரத்தில் முழுக்கட்டுரையை அனுப்ப இயலவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக முழுக்கட்டுரையை ஒப்படைக்கும் இறுதி நாள் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் செயலாளர் செல்வி மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளோர் எதிர்வரும் 26-ஆம் தேதிக்குள் தங்களின் முழுக்கட்டுரையை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இக்கட்டுரைகள் யாவும் ஒன்பது பேர் அடங்கிய மதிப்பீட்டாளர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு மேலும் மெருக்கூட்டப்படவுள்ளன. இவை மாநாட்டுக்குப் பிறகு ISBN எண்களுடன் மின்னூல்களாக வெளியிடப்பட உள்ளன என்று மாநாட்டுக் குழுத் தலைவர் முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்துள்ளார்.

மாநாட்டைப் பற்றிய மேல் விவரங்களைப் பெற முனைவர் முனீஸ்வரன் குமார் 011-26500184 அல்லது செல்வி மகேஸ்வரி 012-7084016 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected] எனும் மின்னஞ்சலுக்குத் தகவல் அனுப்பி வைக்கலாம்.