செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சிவகார்த்திகேயனுக்கு – விஜய் சேதுபதி போட்டியா?
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு – விஜய் சேதுபதி போட்டியா?

நடிகர் விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படமும், மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர்.

இவ்வேளையில், மிஸ்டர் லோக்கல் இறுதிக்கட்ட பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர

எனவே, சிந்துபாத் படத்தை முன்கூட்டியே மே 3-ஆம் தேதியில் ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. அருண்குமார் – விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சு.அருண்குமார் இயக்கத்தில், வன்சன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன