வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்க ஸ்ரீ முருகன் நிலையம் முனைப்பு காட்டுகிறது – முனைவர் சேகர் நாராயணன்
முதன்மைச் செய்திகள்

மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்க ஸ்ரீ முருகன் நிலையம் முனைப்பு காட்டுகிறது – முனைவர் சேகர் நாராயணன்

ஈப்போ, ஏப். 22 :

நாட்டில் மேலும் திறன் வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதே ஸ்ரீ முருகன் நிலையம் முனைப்பு காட்டி வருவதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் கூறினார். இந்த நாட்டில் இந்திய மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க உருவாக்கப்பட்ட ஸ்ரீ முருகன் நிலையம் தொடந்து அது அதன் சேவை சிறந்த முறையில் வழங்கி வருகிறது.

இன்று இந்திய மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து ஸ்ரீ மருகன் நிலையம் பல்வேறு நிலைகளில் தனது பங்கினை ஆற்றி வருகிறது. இதில் கல்வியை மேற்கொண்ட மாணவர்கள் சிறந்த நிலையில் உள்ளனர்.

இன்று இங்கு தொடங்கப்பட்ட எஸ்பி்எம் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கில் பெரும் திரனான மாணவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ஈப்போ ஆசிரியர் பயிற்சி கழகத்தின் தமிழ்ப்பிரிவுத் தலைவருமான முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.

கஷ்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மேம்பாடு காணலாம் , அதுபோல இஷ்டப்பட்டு படித்தால் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குவதற்குறிய வாய்ப்பை அது ஏற்படுத்தும் என்றார். பலர் படிக்கவேண்டிய வயதில் படிப்பதை மேற்கொள்ளாமல் இன்று முறையான வேலையின்றி அவதிப்பட்டு வருவதை காண முடிகிறது.

எந்த துறைக்கு சென்றாலும் கல்விச் சான்றிதழைக் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு இன்று கல்வி முக்கியமாக விளங்குகிறது .கல்வின் அவசியத்தை உணர்ந்து ஸ்ரீ முருகன் நிலையம் வகுப்புகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.இங்குள்ள சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தன் முனைப்பு உரையும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன