உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தொழில் வர்த்தக திறனாளர் மாநாடு!

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

டிரா மலேசியா என்று அழைக்கப்படும் மலேசிய புறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம் நடத்தும் மலேசியா உலகத்தமிழ் தொழில் வர்த்தக திறனாளர் மாநாடு சைபர் ஜெயா மெடிக்கல் யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிகல் சைன்ஸ் (Cyberjaya University Collage of Medical Sciences) பல்கலைக்கழகத்தில் வரும் மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் உலகமெங்கும் வசிக்கின்ற தமிழ் வல்லுனர்கள் குறிப்பாக பல்வேறு நாடுகளில் தொழிற்துறையில் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டிய முதலீட்டாளர்களும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் வல்லுனர்களும் மனிதவளத்துறையில் சிறந்து விளங்கும் திறனாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்மாநாடு இளம் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்பு, முதலீடு, வழிகாட்டுதல் என அனைத்து நிலைகளிலும் உதவி செய்யும் வகையில் அமைய இருக்கிறது.

ஒருவருக்கொருவர் வியாபார பரிமாற்றம் செய்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்க உரிமம் பெற்றுத்தருவது, ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் வல்லுனர்களின் வழிகாட்டல் என பல தொழில் வாய்ப்புகளை இம்மாநாடு வழங்க இருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து மலேசியாவில் தொழில் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 நாடுகளில் இருந்து 500 ற்கும் மேற்பட்ட பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக ஆண்களுக்கு நிகர் பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை புரியும் இக்காலத்தில் பெண் தொழில் முனைவோர் பலர் இம்மாநாட்டில் பங்கு கொள்ள உள்ளனர். 50 ற்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்கள் மற்றும் திறனாளர்கள் எழுமின் மலேசியா மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதை உறுதி செய்துள்ளனர். ஆளுமைமிக்க மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்ற தமிழ் தொழிலதிபர்களின் அனுபவப் பகிர்வுகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

தொழில் சார்ந்த அறிவு இருந்து முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் இம்மாநாடு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை கொண்டு வர இருக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இது தொடர்பான முழு விவரங்களை பெறவும் தங்களது வருகையை பதிந்து கொள்ளவும் www.therise.asia என்ற வலைதள முகவரியை அணுகலாம்.

இந்த சமுதாயம் பொருளாதாரத்திலும் அறிவு சார்ந்த துறைகளிலும் ஆளுமை பெற்று மீண்டும் முதன்மை பெறவேண்டும் என்பதே எழுமின் மலேசியா நிகழ்வின் முக்கிய நோக்கம். மேலும் விவரங்களுக்கு டிரா மலேசியா சரவணன் அவர்களை +60125267923 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உலகெங்கும் இருந்து சுமார் 500 தமிழ் பேராளர்கள் ஒன்று கூடும் இம்மாநாட்டில் உலகெங்கும் உள்ள ஏனைய தமிழர்களையும் ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கிறோம். எழுமின் மலேசியா-
தமிழர் தலைநிமிர் காலம்!