புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கோட்டா முறையில் மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடா? அமைச்சரவை முடிவு செய்யும்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கோட்டா முறையில் மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடா? அமைச்சரவை முடிவு செய்யும்

புத்ராஜெயா. ஏப்ரல் 24-

மெட்ரிகுலேஷன் கல்வித்திட்டத்தை மேற்கொள்வதில் மலாய்க்காரர் அல்லாதாருக்கும் அல்லது பூமிபுத்ராக்களுக்கும் கோட்டா முறையில் இடங்களை ஒதுக்கீடு செய்யும் விவகாரம் குறித்து புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கும் என இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் கூறினார். அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என தம்மிடம் கூறப்பட்டதாக அவர் சொன்னார். அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவுக்காக நாம் காத்திருப்போம் என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் சைட் சாடிக் இதனை தெரிவித்தார். மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான கோட்டா முறை குறித்து குறித்து அரசாங்கம் மறு ஆய்வு செய்யுமா என செய்தியாளர்கள் சைட் சாடிக்கிடம் வினவியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இதனிடையே இனங்களின் ஒற்றுமைக்காக தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என பெர்சத்து இளைஞர் பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர் முகமட் அஸ்ராப் கூறியிருந்தது குறித்தும் சைட் சாடிக்கிடம் வினவப்பட்டது. மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்காக அனைத்து தரப்பினரும் காத்திருப்போம் என அவர் மறுமொழி தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இனரீதியிலான கோட்டா முறை ரத்து செய்யப்படவேண்டும் என இதற்கு முன் ஜ.செ.க இளைஞர் பிரிவும் கோரிக்கை விடுத்தது. மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்தில்  பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் இதற்கு முன் கூறியிருந்தார். எனினும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் கூடுதல் இடம் ஒதுக்கப்படுமா என்பதை அமைச்சரவை ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன