புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள்! – டாக்டர் மஸ்லி மாலிக்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள்! – டாக்டர் மஸ்லி மாலிக்

புத்ராஜெயா ஏப்ரல் 24-

மெட்ரிகுலேஷன் விவகாரம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுகின்ற நிலையில் புதிய அணுகுமுறையை முன்னெடுக்க கல்வி அமைச்சு முனைப்பு காட்டுவதாக அதன் அறிக்கை இருக்கின்றது.

இதுவரையில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இணைகின்றார்கள். அந்த எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்திருப்பதாக அமைச்சு வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகின்றது.

குறிப்பாக அறிவியல் புத்தாக்க துறையில் அதிகமான பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பொருத்தவரை 90 விழுக்காடு இடங்கள் பூமிபுத்ரா மட்டுமே வழங்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதர 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாத சமூகத்தினருக்கு வழங்கப்படும். ஆனால் அந்த மொத்த எண்ணிக்கை என்ன என்பதை கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டவில்லை.

15 ஆயிரம் மாணவர்கள் புதிதாக இணைவதால் அதற்கான செலவுகள் குறித்து நீதி அமைச்சிடம் கூடிய விரைவில் பேசப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டது என்கிற செய்தியை அவர் குறிப்பிடவில்லை. மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பரிசீலனைக்குப் பிறகே எத்தனை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம் கிடைத்தது என்பது உறுதிப்படுத்தப் படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன