புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்! மஇகா  குணாளன் கடுங்கண்டனம்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்! மஇகா  குணாளன் கடுங்கண்டனம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 25-

துன் மகாதீர் பிரதமராகயிருக்கிறவரை இந்நாட்டு இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு கடந்துபோன 22 ஆண்டுக்கால அனுபவங்கள் மட்டுமல்ல, இன்று,மீண்டும் அதே நிலைப்பாடுதான் தொடர்கிறென்று- ம இ கா தகவல் பிரிவுத்தலைவரான வே.குணாளன் குறிப்பிட்டார்.

அதனுடைய எதிரொலியாகத்தான் நமது மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் நுழைவுத் தேர்வில் அவமானப்பட்டு இருக்கிறார்கள் என்று குணாளன் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்த மெட்ரிக்- முறையில், 22 ஆண்டுகள் பிரதமராகயிருந்த மகாதீர் காலத்திலிருந்தே, நமது மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படுவதில்லை, இத்திட்ட வரைவுவானது; மலாய் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே முன்வைத்து அமல்படுத்தியவர் மகாதீர்!

இந்த,மெட்ரிக்- நுழைவில் துன் படாவி- காலத்தில்தான் அதாவது- 2004 க்கு பிறகுதான் நமது மாணவர்கள் ஓரளவு நுழைக்கப்பட்டார்கள், அதன் பின், 2010 -ல்- டத்தோஸ்ரீ நஜிப் பிரதமரானப் பிறகுதான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நமக்கு ஒதுக்கப்பட்டன.

அந்த எண்ணிக்கை 2018 -ல்- 2200 வரைக்குமாக அதிகரிக்கப்பட்டு, 2019-ல்- இன்று மீண்டும் பிரதமராகியிருக்கும் மகாதீரால் -700- றாக குறைக்கப் பட்டுள்ளது. அதாவது மகாதீர் மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை நமது மாணவர்கள் விசயத்தில் தொடங்கிவிட்டார்,அதாவது வயிற்றில் அடித்துவிட்டார்! என்று குணாளன் குற்றஞ்சாட்டினார்.

இப்படியொரு நிலை ,நமது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளதைக் கண்டும் காணாத மாதரி நடந்து கொண்ட ,நமது நான்கரை மண்ணாங்கட்டி மந்திரிகள் வேறு! இதற்கு துணைப்போய் இருக்கிறார்கள் என்று குணாளன் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவைக்கூட்டதில் மகாதீர் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார், தற்போதுள்ள மெட்ரிக்கான இடங்களை 25-ஆயிரத்திலிருந்து, 40- ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறதாம்,

அதில் 10 சதவீதம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்படுமாம், அதாவது; 4- ஆயிரம் இடங்கள்-அதை சீன மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் ,மற்றும் இதர மாணவர்களுக்கும் பங்கீட்டு முறையில் பகர்ந்தளிக்கப்படுமாம்,அப்படி படுமா;படாதா என்றுக்கூட துல்லிதமாகத் தெரியவில்லை. என்று குறிப்பட்ட குணாளன், இந்தக் கணக்குப்படி பார்த்தாலும் நமது மாணவர்களுக்கு, 2000 ஆயிரம் இடங்கள் கூட கிடைக்குமா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இதில், சீன மாணவர்களின் தேர்ச்சியும் புள்ளிவிபரமும் அதிகமாகயிருக்குமானால் -நமது மாணவர்களுக்கான இடத்தை அவர்களிடம் ஒதுக்கித் தள்ள சாத்தியம் இருக்கலாம்! அந்த நிலை ஏற்பட்டால் மேலும் நமது நிலை மோசமாகுமென்று எச்சரித்த குணாளன், இத்தகைய மறைமுகத் திட்டத்தை உள் வைத்துதான் மகாதீரின் ஹராப்பான் கூட்டணி ஆட்சியிலுள்ள கல்வி அமைச்சு செயல்படுகிறதென்று குணாளன் குற்றஞ்சாட்டினார்,

நமது கோரிக்கை இந்திய மாணவர்களுக்காக- நடப்பிலுள்ள 25 ஆராயித்திலிருந்துதான் 10- சதவீதம் ஒதுக்கவேண்டுமென்பதாகும், அதன்படி 2500 இடங்கள் நமக்கு கிடைத்திருக்க வேண்டும், அதில் 2200 வரைக்கும் 2018இல் வழங்கப்பட்டுள்ளன. இன்று நிலைமையென்ன?-700 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடுயுள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது, அப்படியென்றால் நமது மாணவர் களுக்கான -எஞ்சிய அந்த,1500- இடங்கள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, சீன மாணவர்களுக்கா? இந்த கேள்வி எழத்தானே செய்யும்?அப்படியொரு நிலை இருக்குமேயானால் சீன மாணவர்களுக்கான உண்மையான ஒதுக்கீடுதான் என்ன! என்று மஇகா தகவல் பிரிவுத்தலைவரான குணாளன் கேட்டார்.

அதேவேளை 25 ஆயிரத்திலிருந்து தற்போது,எண்ணிக்கை 40, ஆயிரமாக அதிகப்படுத்தப் பட்டிருக்கிதென்றால் அது; அதிகமாக 15  ஆயிரம் இடங்களாகும்! அதிலிருந்துதான் 4 ஆயிரம் இடங்கள் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கென்றால் எதிலிருந்து எத்தனை இடங்கள் நமது மாணவர்களுக்கு ஒதுக்கீடுச் செய்யப்படுமென்று தெரியவில்லை,

எனவே; வழக்கமாக மகாதீரின் இந்த இன ஒதுக்கல் நாடகமானது மெட்ரிக்விசயத்திலும் தற்போதை மலாய் வாக்குஅரசியலில் ஆடும் பொருளாகிவிட்டது. அதாவது 40 ஆயிரம், இட எண்ணிக்கை அதிகரிப்பிலும் கூட, 15 ஆயிரம் இடங்கள் மலாய்க்காரமாணவர்களுக்கு அதிகமாகியுள்ளதேயொழிய, இந்திய மாணவர்களின் மெட்ரிக்- நுழைவானது மேலும் கேள்விக் குறியாகியுள்ளது என்று குணாளன் குறிப்பிட்டார்.

எனவே,இதிலிருந்து தெளிவாகத் தெரிவது, மஇகா- தே.முன்னணி அரசிடம் போராடிப்பெற்ற அந்த -2200 இடங்களைத் ,தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் 40 ஆயிரத்தில் 10 சதவீதமென்றால் 4 ஆயிரம் இடங்களைக்கூட இனி பெறமுடியாத அளவுக்கு மகாதீரின் ஆட்சி காணல் நீராக்கியுள்ளது .

14 வது- பொதுத்தேர்தலுக்குப்பிறகு, இந்தியர்களின் வாழ்வில் *பாலாறும் தேனாறும் ஓடப்போகிறது *என்ற நம்பிக்கையில் 80′ சதவீத வாக்குகளை கண்ணை மூடிக்கொண்டு ஹராப்பானுக்கு கொண்டுப்போய் குவித்ததின் பின் விளைவுதான், இன்றைக்கு மெட்ரிக்- விவகாரத்தில் நமது மாணவர்கள் சிக்கித்தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு காரணமாகும்! என்று குறிப்பிட்ட குணாளன்

எனவே, மகாதீர் திருந்திவிட்டார்! அவர் நல்லவர்! வல்லவர் என்றெல்லாம் தேர்தலில் கதைவிட்ட வேதமூர்த்தி இப்போது எங்கே? மக்களிடம் *அண்டாகா கஜம்; முண்டாக சுஜம் திறந்திடும் சீஜேல் *என்று மாய மந்திரவாதிகள் மாதரி ,நமது அள்ளிவிட்டான் மந்திரிகளின் சத்தம் மெட்ரிக் விசயத்தில் அப்படியே அமுங்கி அமைதியாகி விட்டதேன் என்று ம இ கா. தகவல் பிரிவுத்தலைவரான குணாளன் கேட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன