அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > எம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா

கோலாலம்பூர் ஏப்ரல் 25-

மலேசியாவின் முதன்மை வானொலி நிலையமான ராகாவின் புகழ்பெற்ற அறிவிப்பாளர்கள் ஆகிய ராம் ஆனந்தா மீண்டும் இணைந்து நிகழ்ச்சியை படைத்து வருகின்றார்கள். வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எம்சிஐஎஸ் காப்புறுதி நிறுவனம் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் இணைந்து நேயர்களை சந்திக்கின்றார்கள்.

காப்புறுதி பாதுகாப்பு துறையில் பல ஆண்டுகளாக மலேசியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எம்சிஐஎஸ் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 41 வயதான பிரஷேம் ஷிப்ரன் பொறுப்பேற்றுள்ளார்.

நிதிச் சேவை துறையில் 20 ஆண்டுகள் பழுத்த அனுபவத்தைக் கொண்ட இவர் எம்சிஐஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்திற்கு புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவில் முதன்மை காப்புறுதி நிறுவனமாக எம்சிஐஎஸ் நிறுவனத்தை முதன்மையில் கொண்டுவருவதுதான் தமது நோக்கம் என அவர் தெரிவித்தார். பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் தங்கும் விடுதியில், புதிய நியமனம் அதோடு ராம் ஆனந்தா படைக்கும் நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.

அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க உலகம் தயாராகிவிட்டது. இவ்வேளையில் இந்நிறுவனத்தின் புதிய செயல்திட்டங்கள், புதிய இலக்கை நோக்கி பயணிக்க நானும் தயாராகி விட்டேன் என்றார் அவர். தென்னாப்பிரிக்காவின் முதன்மை நிறுவனமான சன்லம் குழுமத்துடன் இணைந்து எம்சிஐஎஸ் காப்புறுதி நிறுவனம் செயல்படுவதால் புதிய மாற்றங்கள் நிச்சயமாக உருவாகும் என பிரஷேம் நம்பிக்கை தெரிவித்தார்.

தமது நிறுவனத்தின் செயல் திட்டங்கள் குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதற்கும் அவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டும் ராகா வானொலி நிலையத்துடன் இணைந்து புதிய நிகழ்ச்சியை வழங்கவும் தமது நிறுவனம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

துடிப்புடன் நிகழ்ச்சியை படைக்கும் ராம் ஆனந்தா இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை படைக்க வருகின்றார்கள். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒலிபரப்புத் துறையில் இருந்து இவர்கள் இடைக்கால ஓய்வு பெற்றனர். ஏப்ரல் ஏழாம் தேதி தொடக்கம் எம்சிஐஎஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியை வார இறுதியில் இவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள்.

ஒலிபரப்புத் துறையில் இருந்தாலும் மக்களுக்கு உதவும் மனப்பான்மையை நாங்கள் கொண்டிருக்கின்றோம். எங்கள் நிகழ்ச்சியில் எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி இயலாதவர்களுக்கு உதவுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்கிறோம் என ராம் ஆனந்தா தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படும். அதேவேளையில் புதிய காப்புறுதி குறித்த விளக்கங்கள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன