அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால் அங்கு அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முழுவதும் இந்த அவசரகால சட்டத்தை அமல்படுத்த இலங்கை நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அச்ச நிலைமையை நீக்கி,   இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தேக நபர்களை கைது செய்ய போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. அதோடு, ட்ரோன் கருவியை பறக்கச் செய்வதற்கும் இலங்கையில் உடனடியாக தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே, கொழும்பு அருகே, புகொடை நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்குப் பின்பகுதியின் காலி நிலத்தில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக தகவல் வெளியகி உள்ளது.

இது அங்குள்ள மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன