அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > காத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

காத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..!

தேர்தல் முடிவுகள் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுக்ம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கின்றார். மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, செய்தியார்களிடத்தில் இதனைக் கூறினார்.

அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றே பதில் தந்தார்.

தமிழக அரசியலில் மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு, நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். இது மிகவும் அவசியமானது என்று கூறினார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன