அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

மைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

மைடா எனப்படும் மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் அவர் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியா -சீனா நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் அப்துல் மஜிட் அகமட் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மைடா அறிவித்துள்ளது.

தொழில்துறை உலகிலும் முத்திரை பதித்துள்ள மலேசியர்களில் ஒருவராகவும் அவர் விளங்கி வருகிறார் மலேசிய பங்கு பரிவர்த்தனையில் இடம்பெற்றுள்ள பல முன்னணி நிறுவனங்களின் வாரியங்களிலும் அப்துல் மஜீத் இருந்து வருகிறார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் அப்துல் மஜிட் பட்டம் பெற்றவர் ஆவார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மைடாவின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய டான்ஸ்ரீ அமிர்ஷாம் அஸிஸ் அவர்களுக்கு பதில் டத்தோ அப்துல் மஜிட் அகமட் மைடாவின் புதிய தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த அமைப்பிற்கும் நாட்டிற்கும் அற்புதமான முறையில் சிறந்த பங்காற்றிய டான்ஸ்ரீ அமிர்ஷாமிற்கு மைடா நன்றியை தெரிவித்துக் கொண்டது.

பரவலான அனுபவம் கொண்ட டத்தோ அப்துல் மஜிட்டின் தலைமைத்துவம் மைடாவுக்கு பெரும் மதிப்பை கொண்டதாக இருக்கும் .குறிப்பாக அதிக தரமான முதலீடுகளை கவர்வதற்கான மைடாவின் முயற்சிக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை கொண்டுவரும் என அனைத்து மலேசியர்களும் நம்புகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன