அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது
குற்றவியல்

கையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது

புத்ராஜெயா, ஏப்ரல் 26-

   அமைச்சு ஒன்றின் அமலாக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியது மீதான விசாரணைக்கு உதவும் வகையில் நிறுவனம் ஒன்றின் நிர்வாக தலைமை அதிகாரி மற்றும் ஆலோசகர் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்தது.

         இவ்விருவரும் அந்த அதிகாரிகளுக்கு கடந்தாண்டு லட்சக்கணக்கான வெள்ளியை கையூட்டாக வழங்கியதாகக் கூறப்பட்டது.

     டத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்ட அந்த 49  வயது நிர்வாக தலைமை அதிகாரி வியாழக்கிழமை மாலை மணி 5.30 அளவில் தலைநகர் டூத்தாமாஸ் ராயாவில் கைது செய்யப்பட்டார்.  சந்தேகப் பேர்வழிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  இதற்காக  தங்கள்   மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க அமைச்சு ஒன்றின் அமலாக்க அதிகாரிகளுக்கு இருவரும்  கையூட்டு வழங்கியதாகக் கூறப்பட்டது.

    இவர்கள் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ சிமி அப்துல் கனி உறுதிப்படுத்தினார்.  தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவாக இவ்விருவரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன