அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது!
இந்தியா/ ஈழம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது!

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

விமானத்தின் மூலம் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த மலேசிய பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் 67,600 அமெரிக்க டாலர் வைத்திருந்தது தொடர்பில் அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டார். இப்பெண் தடுத்து வைக்கப்பட்டதை இந்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள மலேசிய தூதரக பேராளர் அலுவலகத்திற்கு தெரிவித்ததாக தூதரக அதிகாரி சரவணன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பெண்மணி தூதரக அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அந்த பெண்மணியுடன் தொடர்பு கொள்வதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம் என சரவணன் தெரிவித்தார்.

ஸ்ரீதேவி (வயது 54) என்ற அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டதாக அடையாளம் கூறப்பட்டது.  இந்திய சுங்கத்துறை விதியின் கீழ் கைது செய்யப்பட்ட ராயாவருப்பு ஸ்ரீ தேவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . எனினும் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன