அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > வியாபாரத்தின் வழி வெற்றிப் பாதையில் பயணத்தை தொடர நீங்கள் தயாரா?
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

வியாபாரத்தின் வழி வெற்றிப் பாதையில் பயணத்தை தொடர நீங்கள் தயாரா?

திங்கட்கிழமைகளில் இரவு மணி 10.30க்கு மின்னல் எப் எம்-மில் சிகரம் தொடு நிகழ்ச்சி ஒலியேறுகின்றது. மின்னலின் அறிவிப்பாளர் சத்யா நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார்.

இந்திய சமுதாயத்தை வர்த்தகர் சமுதாயமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்ச்சியாக இந்நிகழ்ச்சி படைக்கப்படுகின்றது. வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்ட நகர்த்தலுக்கு தடம் பதிக்க இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்ற வார நிகழ்ச்சியில் Bakery வியாபாரம் குறித்து இடம்பெற்றது. வருகின்ற திங்கட்கிழமை பூ வியாபாரத்தில் 10 ஆண்டுகளாக வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் குண ராஜ்வுடனான சந்திப்பு இடம் பெறும்.

இந்நிகழ்ச்சியில் வியாபார யுத்திகள், நுணுக்கங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். திங்கட்கிழமைகளில் தயாராகக் காத்திருங்கள். இரவு மணி 10.30க்கு! இந்நிகழ்ச்சிக்கான உங்களது கருத்துக்களை நீங்கள் www.facebook.com/rtmminnalfm அல்லது விளக்கங்களை பெற 03-22887497 எனும் எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை மின்னல் எப் எம்-மின் you tube-லும் கேட்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன