அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இருமொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு பிரதமர் துறையில் மகஜர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இருமொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு பிரதமர் துறையில் மகஜர்

கோலாலம்பூர், ஆக 18-

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி பாடத்திட்ட கொள்கையை அகற்றக் கோரி பிரதமர் துறையில் மூன்றாவது முறையாக மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் நேற்று கூறினார்.

பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி தனசீலனிடம் இந்த மகஜர் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பில் இரு முறை கல்வி அமைச்சிடம் மகஜர் வழங்கப்பட்டது.

இந்த முறை பிரதமரின் நேரடிப் பார்வைக்கு இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார். தேசிய வியூக இயக்குனர் வி.பாலமுருகன், தமிழ் அறவாரிய உதவித் தலைவர் பொன்ரங்கன் உள்ளிட்டோரும் புத்ரா ஜெயாவில் மகஜர் வழங்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலப் பாடங்களை தவிர மற்ற பாடங்கள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று கலைமுகிலன் சொன்னார். தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி பாடத்திட்ட கொள்கையை அனுமதித்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழ்மொழி பயன்பாடு இல்லாமல் போய்விடும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே, தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி பாடத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் என்று அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன