திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மலேசியப் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தில் நாட்டுக! – அமைச்சர் பொன்.வேதமூர்த்தி
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியப் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தில் நாட்டுக! – அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஏப்ரல் 26-

மலேசியத் திருநாட்டின் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தில் நாட்டும்படி மலையேற்றக் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வழி அனுப்பினார்.

‘டிரீம்ஸ்’ என்று சுறுக்கமாக அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த எண்மர் கொண்ட குழுவினர், ஏப்ரல் 26-ஆம் நாள் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குளிர் நாடான நேப்பாளத்திற்கு பயணமான பொழுது, அவர்களை வழி அனுப்பிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமுர்த்தி, “எவரெஸ்ட் சிகரத்தின் முகட்டைத் தொடும் முயற்சியில் வெற்றி பெற்று, நாட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்களின் இந்த உன்னத முயற்சிக்கு மலேசிய மக்கள் மானசீக ஆதரவு தெரிவிப்பார்கள்” என்றும் வாழ்த்தினார்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்படிப்பட்டவர்கள், வாழ்வில் சாதனை படைக்க முயல்வது ஒருபுறம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கும் மன வலிமைக்கும் முன்னுரிமை கொடுப்பதால், வளமான வாழ்வு இவரைப் போன்றவர்களுக்கு வசமாகும்.

17 நாட்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் வெற்றிக் குறிக்கோள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் அளித்து முயற்சியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பாதுகாப்புடன் திரும்பும்படி எண்மரையும் சிப்பாங் பன்னாட்டு விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பினார் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன