புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 1 இந்தியன் 1 சமுதாயம் சித்திரை புத்தாண்டு மதுரகீதம்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

1 இந்தியன் 1 சமுதாயம் சித்திரை புத்தாண்டு மதுரகீதம்

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

எம்டிஎப் புரொடக்‌ஷன் ஏற்பாட்டில் 15 ஆவது ஆண்டாக 1 இந்தியன் 1 சமுதாயம் சித்திரை புத்தாண்டு மதுரகீதம் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி தலைநகர் லிட்டல் இந்தியா temple of fine arts அரங்கில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் பஞ்சாபி என இந்து மக்களின் ஒருமித்த நிகழ்ச்சியாக இது அமையும் என ஏற்பாட்டு குழு தலைவர் டத்தோ காந்தாராவ் தெரிவித்தார்.

இவ் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 2.30 தொடங்கி மூன்று மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அவர் மேலும் கூறினார். நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இது ரசிகர்களை நிச்சயம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டாக சித்திரை புத்தாண்டு மதுரகீதம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்து வருகின்றது. மலேசிய இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுவதாக காந்தாராவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒற்றுமை தான் நமது அடையாளம் அதனை பெருநாள் காலங்களில் வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் அவர் நினைவுறுத்தினார். சித்திரைப் புத்தாண்டு இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் உன்னத நாள். அதனால் இந்த புத்தாண்டு மதுரகீதம் நிகழ்ச்சியை நமது ஒற்றுமையை எடுத்துரைக்கும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் காந்திதாசன், விஜயன், நளினா, டிஎம்எஸ் நவீன், பிரகாஷ், கமலேஸ்வரி ஆகியோருடன் தபேலா வினோத்தும் பங்கேற்கிறார். மலேசியாவின் முதன்மை இசைக் கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமனின் இசைக்குழு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றது.

பாடல் மட்டுமின்றி கண்கவரும் நடனத்தை வழங்க கிரேட் அண்ட் கோல்ட் டான்ஸ்சும் தயாராக இருக்கின்றார்கள். இளைஞர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்கத்தை நாம் கொண்டிருப்பதால் தலை நகரை சேர்ந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் இதில் திரளாக கலந்து கொள்வார்கள் என டத்தோ காந்தாராவ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன