அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம்: ஜி டிம் குழுமத்தின் மீது 3 பங்குதாரர்கள் வழக்கு பதிவு
சமூகம்முதன்மைச் செய்திகள்

மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம்: ஜி டிம் குழுமத்தின் மீது 3 பங்குதாரர்கள் வழக்கு பதிவு

கோலாலம்பூர் ஏப்ரல் 27,

மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இன்னமும் பங்கு உரிமையை கொண்டிருக்கும் மூன்று பங்குதாரர்கள், அந்த நிறுவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜி டிம் குழுமத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் விற்கப்பட்டதோடு அதற்கான பங்கு உரிமையை தராத காரணத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து இருப்பதாக, அவர்களின் சார்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞரான டத்தோ டேவிட் குருபாதம் கூ றினார்.

டத்தோ இளங்கோ, டத்தோ எஸ்.எம். முத்து, அலமேலு ஆகிய மூவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார். மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காப்புறுதி நிறுவனம், நிலம் ஆகியவை அடிப்படை விலைக்கு விற்கப்பட்டது தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இருந்தார்கள். அந்நிறுவனம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திப்பதாக வெளிவந்த செய்தியை அறிந்து 80 விழுக்காடு பங்குதாரர்கள் ஜி டிம் வழங்கிய 80 காசுக்கு பங்குகளை விற்று விட்டனர்.

93 விழுக்காடு, மைக்கா ஹோல்டிங்ஸ் உரிமத்தை ஜி.டிம் உரிமையாளர் டான்ஸ்ரீ ஞான லிங்கம் பெற்றார். அதன் அடிப்படையில் மைக்கா ஹோல்டிங்ஸ் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். மீதமுள்ள 7 விழுக்காடு பங்குகளை இன்னமும் விற்காத பங்குதாரர்கள் தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் இதுவரையில் இந்த ஏழு விழுக்காடு பங்குதாரர்களுக்கு எந்த லாப ஈவும் வழங்கப்படவில்லை என்பதை இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினர் புனிதன் பரமசிவம் தெரிவித்தார்.

மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காப்புறுதி நிறுவனம் 145 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது. அதேபோல் நிலமும் 28 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த நிறுவனத்தின் பங்கு உரிமையை கொண்டிருக்கும் 7 விழுக்காடு பங்கு தாரர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

இத்தருணத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காப்புறுதி நிறுவனம் மற்றும் நிலத்தை வாங்குவதற்கு பெரிய எண்ணிக்கையிலான பரிந்துரை முன்வைக்கப்பட நிலையில், குறைந்த விலையிலேயே இந்த இரண்டும் விற்கப்பட்டுள்ளன. அதிகபட்ச விலை இந்த இரண்டிற்கும் வழங்கப்பட்ட நிலையில் ஏன் குறைந்த விலையில் நிர்ணயித்த நிறுவனத்திற்கு இவைகள் விற்கப்பட்டன என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. இது குறித்தும் நீதிமன்றத்தில் ஜி டிம் குழுமம் பதில் அளிக்க வேண்டும்.

  இது குறித்த அனைத்து ஆவணங்களும் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இன்னமும் 7 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கும் பங்குதாரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வழக்கை முன்னெடுக்கும் 3 பிரதிவாதிகளுக்கிம் தமது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக புனிதன் தெரிவித்தார். அதோடு இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 7 விழுக்காடு பங்குதாரர்கள் உட்பட முன்னமே பங்குகளை விற்ற பங்குதாரர்களுக்கும் ஒரு நியாயம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் மீது மைக்கா ஹோல்டிங்ஸ் குறித்து முன்னெடுக்கும் புகார்களுக்கும் இவ்வழக்கு முடிவைத் தரும் என அவர் எதிர்பார்க்கின்றார். வழக்கறிஞர் முரளி மற்றும் வசந்தி ஆகியோரும் இந்த வழக்கில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன