புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கியுனெட் (QNET) உலகளாவிய மாநாடு : பினாங்கில் 13 ஆயிரம் தொழில் முனைவர்கள்!!
சமூகம்முதன்மைச் செய்திகள்

கியுனெட் (QNET) உலகளாவிய மாநாடு : பினாங்கில் 13 ஆயிரம் தொழில் முனைவர்கள்!!

பினாங்கு ஏப். 27

   ஆசியாவின் முன்னணி நேரடி விற்பனை நிறுவனமான கியுனெட் உலகளாவிய 5 நாள் மாநாட்டை பினாங்கில் நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர்.

  பினாங்கு பாயான் பாருவிலுள்ள SUBTERANEAN அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் (SPICE) நடைபெற்ற இந்த மாநாட்டில் உயரிய ஆற்றலைக் 30- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கியுனெட் விநியோகிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

  பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். கியுஐ குழுமத்தின் நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் மற்றும் துணைத்தலைவர் ஜோசப் பிஸ்மார்க் ஆகியோரோடு கியுஐ மலேசிய தலைவர் டான்ஸ்ரீ மெகாட் நஜ்முடின் மெகாட் காஸ், கியுனெட் மலேசியத் தலைவர் டத்தோ பலாவான் துப்ஃபில் நவாப் மற்றும் கியுனெட்டின் இதர பல்வேறு முன்னணி அனைத்துலக வர்த்தக பங்காளிகளும் கலந்து கொண்டனர்.

 

 தொடர்ந்து 6-வது ஆண்டாக பினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் இந்த ஐந்து நாள் மாநாட்டை நடத்திய கியுனெட்டிற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் ராமசாமி தமதுரையில் தெரிவித்தார்.

 தங்களின் விநியோகிப்பாளர்களுக்கு சிறந்த சேவை செய்வதற்கும் அவர்களுடனான நெருக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் இந்த வெற்றிகரமான மாநாடு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கியுனெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மலாவ் கலுசா தெரிவித்தார்.

  இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்கள் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பெறமுடிந்தது. கியுனெட் யூனிட் போன்ற நேரடி விற்பனை நிறுவனங்கள் தங்களது தொழில்முனைவோருக்கான உணர்வை கொண்டாடுவதற்கான சிறந்த தளத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.

   அதோடு, உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களிடையே கியுனெட் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் சமூகத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக மலாவ் கலுசா கூறினார்.

 

 

   ஆரோக்கியம், தனிப்பட்ட நலன் மற்றும் அது தொடர்பான பல்வேறு பொருட்கள், விடுமுறை கால பயணங்கள், இல்லத்தை கண்காணிக்கும் மற்றும் மின் வர்த்தக கல்வி ஆகியவற்றை, கியுஐ குழும நிறுவனங்களின் துணை நிறுவனமான கியுனெட் வழங்குகிறது.

   உலகம் முழுவதிலும் சேர்ந்த பயனீட்டாளர்களின் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சில்லரை வர்த்தக சேவைக்கான தளமாகவும் இது விளங்குகிறது.
2018 ஆம் ஆண்டில் பல நோக்கு நேரடி சந்தையின் 100 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கியுனெட்டை இல்லங்களுக்கான வர்த்தகம், நேரடி விற்பனை இணையதள செய்தி பதிவேடு குறிப்பிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன